வில்லன் யாரு?: ராட்சசன் படத்தைப் பாராட்டித் தள்ளிய  ரஜினி!

இப்படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷாலைத் தொலைப்பேசியில் அழைத்து படம் குறித்த தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்...

Published On :7 பிப்ரவரி 2024, 3:35 pm IST

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - ராட்சசன். இசை - ஜிப்ரான்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினி. அவர் இப்படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷாலைத் தொலைப்பேசியில் அழைத்து படம் குறித்த தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி விஷ்ணு விஷால் ட்விட்டரில் கூறியதாவது:

சூப்பர் ஸ்டார் ரஜினி உங்களைத் தொலைப்பேசியில் அழைத்து ஆச்சரியப்படுத்தும்போது நீங்கள் சந்தோஷத்தில் குதிப்பீர்கள். ராட்சசன் படம் குறித்து அவர் சொன்ன சில வார்த்தைகள் - அற்புதம், அற்புதம், அற்புதம். நடிப்புல தூள் கிளப்பிட்டீங்க. காவல் உடையில் கச்சிதமாக இருக்கீங்க. வில்லன் யாரு? அட்டகாசமான உடல் மொழி. இயக்குநர் மற்றும் உங்களுடைய கூட்டணி அபாரம் என்று பாராட்டியதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.