சந்திரகுமாரி தொடரில் ராதிகாவுக்குப் பதிலாக நடிக்கவுள்ள மூத்த நடிகை!

அடுத்த இரு மாதங்களுக்கு சிறு ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். ஜூன் மாதம் மீண்டும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடரின் மூலமாக...
சந்திரகுமாரி தொடரில் ராதிகாவுக்குப் பதிலாக நடிக்கவுள்ள மூத்த நடிகை!

ராடன் நிறுவனம் சார்பாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகை ராதிகா சரத்குமாரின் சந்திரகுமாரி என்கிற சரித்திரப் பின்னணி கொண்ட புதிய நெடுந்தொடர் சமீபத்தில் ஆரம்பமானது. நிகழ்காலக் காட்சிகளை சி.ஜே. பாஸ்கரும் சரித்திரக் காலக் காட்சிகளை பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் இயக்கினார்கள். இந்த நாடகத்தில் 7 வேடத்தில் ராதிகா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. நிகழ்காலக் கதையில் 3 வேடங்களிலும் சரித்திரக் கதையில் 4 வேடங்களிலும் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. தாமிரபரணி படத்தில் கதாநாயகியாக நடித்த பானு, ராதிகாவின் மகளாக நடிக்கிறார். நிரோஷா, உமா ரியாஸ் கான் போன்றோரும் நடிக்கிறார்கள். இசை - சிற்பி.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில், இந்த நெடுந்தொடரில் இரு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

வழக்கமாக, ராதிகா நடிக்கும் தொடர்கள் இரவு 9.30 மணிக்குத்தான் தொடங்கும். பிரைம் டைம் என்று சொல்லப்படும் இரவு 9.30 - 10.00 ஆகிய நேரம் ராதிகாவுக்காக ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது சந்திரகுமாரி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாறியுள்ளது. கடந்த மார்ச் 18 முதல் மாலை 6.30 மணிக்கு சந்திரகுமாரி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

இதுவரை 6850 எபிசோட்களில் நடித்துவிட்டேன். தொலைக்காட்சித் தொடர்களில் இத்தனை மணி நேரம் நடித்த ஒரே நடிகை நான்தான். அடுத்த இரு மாதங்களுக்கு சிறு ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். ஜூன் மாதம் மீண்டும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடரின் மூலமாக நான் திரும்புகிறேன். அனைவருடைய அன்புக்கும் நன்றி என்று கூறினார். ராதிகாவின் இந்த அறிவிப்பால ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இதையடுத்து தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராதிகா. சந்திரகுமாரி தொடரில் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளார். அவர் கதையில் பெரிய திருப்பத்தைக் கொண்டுவரவுள்ளார். 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சந்திரகுமாரி தொடரைத் தொடர்ந்து கண்டுகளியுங்கள் என்று கூறியுள்ளார். விஜி சந்திரசேகர் பல படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com