'கோ’வாக மாறுமா கீ? நடிகர் ஜீவா சிறப்பு பேட்டி (விடியோ)

ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்ஜே.பாலாஜி நடிப்பில் கீ படம் வரும் விரைவில் வெளியாக இருக்கிறது.
'கோ’வாக மாறுமா கீ? நடிகர் ஜீவா சிறப்பு பேட்டி (விடியோ)

ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்ஜே.பாலாஜி நடிப்பில் கீ படம் வரும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை செராபின் ராயப்பன் தயாரித்துள்ளார். அண்மையில் நடிகர் ஜீவா சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் அளித்த பேட்டி இது. கீ படம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பின்தான் ரிலீஸ் ஆகிறது என்பதில் தொடங்கி சினிமாவில் பல ஜானர்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

கீ என்பது தமிழ் வார்த்தைதான். தொல்காப்பியத்தில் கீ என்பதற்கு எந்த அளவுக்கு நன்மை உண்டோ அந்த அளவுக்கு தீமை உண்டு என்று அர்த்தம் சொல்லப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க தகவல் தொழில்நுட்பம் பற்றிய படம். இந்த தொழில்நுட்பம் நமக்கு பல நன்மைகள் கொடுத்தாலும் இலவச இணைப்பாக பல தீமைகளையும் விளைவிக்கும், அதை எடுத்துச் சொல்லும் படமாக கீ இருக்கும். இன்றைய காலகட்டத்தில் செல்ஃபோன் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் அனைவருக்குமான படம் இது எனலாம். ஜீவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியும்,. ஆர்.ஜே பாலாஜி நண்பராகவும், அனைகா ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இதில் கல்லூரி மாணவராகவும் ஒரு ஜாலியான ஹேக்கராகவும் ஜீவா நடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com