
நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா, தான் எழுதிய கவிதை தொகுப்புக்கு 'முறிந்த சிறகுகள்' என பெயர் வைத்துள்ளார்.
அவ்வப்போது கவிதை வாசிக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்தால் இவர் அங்கு சென்று கவிதை வாசிப்பதுண்டு. ஆங்கிலோ இந்திய சமூகத்தை சேர்ந்த இவர், தன் சமூகத்தைப் பற்றிய வரலாறு புத்தகமொன்றையும் எழுதப் போகிறாராம்.
அண்மையில் பெங்களூரு கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சில கவிதைகளை வாசித்தார். அதில் சில கவிதைகள் சோகமாக இருந்ததற்கு என்ன காரணம்? என்று கேட்டபோது, 'திருமணமான ஒருவருடன் நான் தொடர்பு வைத்திருந்த இருண்ட காலத்தின் துயரத்தை அடக்க முடியாமல்' எழுதியவை அவை எனக் கூறினார்.
இந்நிலையில், நடிப்புக்கு சிறிய இடைவேளை கொடுத்திருந்த ஆண்டிரியா, திடீரென்று ப்ரேக் எடுத்ததன் காரணத்தை விளக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 'வணக்கம் சமூக ஊடகங்கள் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து எனக்கு மிகவும் தேவைப்பட்ட இடைவெளிக்குப் பிறகு நான் திரும்பி வந்துள்ளேன்! எனது மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது, எனவே நான் சிறிது காலம் யாவற்றிலிருந்தும் விடுபட்டு, என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு ஆயுர்வேத மருத்துவ முறையை முயற்சிக்க முடிவு செய்தேன் அதுதான் காரே (KARE).
என்னைப் போன்ற ஒரு காஃபி போதைக்கு அடிமையானவர்களுக்கு இது எளிதானது அல்ல. ஆனால் ஒரு கப் மூலிகை தேநீர் மற்றும் ஐயங்கார்யோகா ஒரு நாளின் மிக நல்ல தொடக்கமாகும்! வீரேச்சனா முறை என்பது பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கானது அல்ல, நான் ஓடிப் போய்விட விரும்பிய சமயங்கள் இருந்தன. ஆனால் நான் அதையெல்லாம் கடந்து, மருத்துவர்கள் பரிந்துரைத்த முறைகளை மிகச் சரியாக பின் பற்றினேன். தற்போது நான் புதியவளாக என்னை உணர்கிறேன். டாக்டர் பிரகாஷ் கல்மேட் தலைமையிலான KARE-வில் உள்ள குழுவினருக்கு மிகப் பெரிய நன்றி. இதோ இப்போது, சமூக மற்றும் பொது வாழ்க்கைக்கு நான் மீண்டு(ம்) வந்துள்ளேன்!’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.