அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாக்க 5 மில்லியன் டாலர் வழங்கிய பிரபல ஹாலிவுட் நடிகர்

உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசானின் பெரும்பகுதி பிரேசிலில் அமைந்துள்ளது.
அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாக்க 5 மில்லியன் டாலர் வழங்கிய பிரபல ஹாலிவுட் நடிகர்

உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசானின் பெரும்பகுதி பிரேசிலில் அமைந்துள்ளது. உலக வெப்பமாதலைத் தடுப்பதில் இந்த மழைக்காடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் பிரேசிலில் சுமார் 73,000 காட்டுத் தீ சம்பவங்கள் நேரிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சம்பவங்களில் இது அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்தக் காட்டுத் தீயால் ஏற்பட்ட புகைமண்டலத்தில் சாவ்பாலோ உள்ளிட்ட பல்வேறு பிரேசில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

அமேசான் மழைக்காடுகளில் பற்றியுள்ள தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தை ஈடுபடுத்த அந்த நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ உத்தரவிட்டுள்ளார். பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்கு பிரேசில் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உலகம் முழுவதும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. 

இதையடுத்து, அமேசானைக் காப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 5 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளைக் கொண்டுள்ள அமேசான் இன்றி புவி வெப்பமயமாதலை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com