புத்தகங்களின் மேல் நின்றபடி போஸ் கொடுத்த ஹாலிவுட் அழகி! ரசிகர்கள் கண்டனம்!

புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் ப்ராண்ட் ப்யூமா விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சலீனா.
salena gomez
salena gomez
Published on
Updated on
2 min read

பிரபல ஹாலிவுட் பாப் பாடகி சலீனா கோம்ஸுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் உண்டு. அண்மையில் நடந்த அமெரிக்கன் ம்யூசிக் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்பெட் மரியாதை பெற்றார் சலீனா. இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் கலந்து கொள்ளும் முதல் நேரலை நிகழ்ச்சி என்பதால் சலீனாவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சமீபத்தில் வெளியான அவரது இசைத் தொகுப்பு (lose you to love me) பரவலான கவனம் பெற்ற நிலையில், பரபரப்பாக மீண்டும் இசைப் பயணத்தில் றெக்கை கட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டார் சலீனா.

25 வயதான பாடகி-நடிகை சலீனா, பெண்கள் முன்னேற்றம், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக  பரவலாக பாராட்டுக்களைப் பெற்று வருபவர்.  இந்நிலையில் சமீபத்திய போட்டோஷூட் அவரது மதிப்பை குறைக்கும்படியாக,  இணையத்தில் தலைப்புச் செய்திகளை உருவாக்கியது.

புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் ப்ராண்ட் ப்யூமா விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சலீனா. இதற்கான ஃபோட்டோஷூட் நடந்தபோது, நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட அறையில், சில புத்தகங்களின் மீது ஏறி ஸ்டைலாக போஸ் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்த்த பல ரசிகர்கள் கொதித்தனர். அதிலும் குறிப்பாக இந்திய நெட்டிசன்கள் சலீனாவை சரமாறியாக திட்டித் தீர்த்தனர். ’எங்களுக்கு புத்தகங்கள் என்றால் கடவுள். சரஸ்வதி தேவியை காலில் போட்டு மிதித்து அவமரியாதை செய்கிறார் சலீனா. அழகாக இருந்தாலும் இந்த அடாவடித்தனம் ஆகாது’. இந்தியர்களின் உணர்வை காயப்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் இத்தகைய விளம்பரங்களைத் தடைசெய்ய வேண்டும்’ தயவு செய்து புத்தகங்களை அவமதிக்காதீர்கள், அறிவு என்பது புனிதமானவை, நாம். புத்தகங்களை மதிக்க வேண்டும்’ என்றெல்லாம் டிவீட் செய்து சலீனாவுக்கும், ப்யூமா நிறுவனத்துக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com