
கேல் கடோட் நடிப்பில் ‘வொண்டர் வுமன் 1984’ பட டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் மூலை திரையுலகிற்கு அறிமுகமானவர் கேல் கடோட். இவர் மிஸ் இஸ்ரேல் அழகிப் போட்டியில் வென்றவர். அந்தப் புகழுடன் 2009-ம் ஆண்டு ஹாலிவுட் திரையுலகில் நுழைந்து தனக்கான இடத்தைப் பிடித்தார். பேட்மேன் v சூப்பர்மேன், டான் ஆஃப் ஜஸ்டிஸ் போன்ற படங்கள் மூலம் நடிப்பாலும் ஆக்ஷன் காட்சிகளாலும் புகழ் பெற்றார் கேல் கடோட். பின்னர் கிரிமினல், ட்ரிபிள் 9, வொண்டர் வுமன் முதல் பாகம் உள்ளிட்ட படங்களின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றார் கேல் கடோட்.
இந்நிலையில், வொண்டர் வுமன் படத்தின் அடுத்த பாகமாக ‘வொண்டர் வுமன் 1984’ என்ற பிரமாண்டமான படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பாட்டி ஜென்கின்ஸ் இயக்கிய இப்படத்தை டிசி பிலிம்ஸ், அட்லஸ் என்டர்டெய்ன்மெண்ட், தி ஸ்டோன் குவாரி, டென்சன்ட் பிக்சர்ஸ், பிரான் ஸ்டுடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்தப் படம் ஜூன் 5, 2020-ல் வெளிவரும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இந்தப் படத்தின் 2 நிமிட டிரெய்லரையும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கேல் கடோடின் உடைகளும், அவர் பேசும் வசனங்களும் இந்த டிரெய்லர் பார்த்த ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.