தனுஷின் 44-வது திரைப்படம்: வெளியானது புதிய அறிவிப்பு!
தனுஷ் நடிப்பில் 44-வது திரைப்படமாக உருவாகவுள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தனுஷ் நடிப்பில் 44-வது திரைப்படமாக உருவாகவுள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் நடித்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா ஒரு வழியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அந்தப் படம் சொல்லிக்கொள்ளும்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. இந்தச் சூழலில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. மேலும், இந்தப் படம் வரும் ஜனவரி 16-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகிய அடுத்த 24 மணி நேரத்துக்குள் தனுஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் 44-வது திரைப்படமாக உருவாகவுள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், இயக்குநர் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இதன்மூலம், இந்தப் படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...