'காதலை இது போல யாராலும் சொல்ல இயலாது!' இயக்குனர் ஹலிதா ஷமீமைப் பாராட்டிய ஜோதிகா!

‘பூவரசம் பீப்பி’ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் தற்போது இயக்கியுள்ள படம்  ‘சில்லு கருப்பட்டி’.
'காதலை இது போல யாராலும் சொல்ல இயலாது!' இயக்குனர் ஹலிதா ஷமீமைப் பாராட்டிய ஜோதிகா!
Published on
Updated on
2 min read

‘பூவரசம் பீப்பி’ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் தற்போது இயக்கியுள்ள படம்  ‘சில்லு கருப்பட்டி’. சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், நிவேதா சதிஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆன்தாலஜி வகைமையில் நான்கு குறுங்கதைகளை ஒருங்கிணைத்து இயக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நான்கு ஒளிப்பதிவாளர்கள் ( மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன் ராமானுஜம் , யாமினி யங்னமூர்த்தி, விஜய் கார்த்திக்) பணியாற்றி உள்ளனர். 

'17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஷ்யன் கல்ச்சர் செண்டரில் டிசம்பர் 18-ம் தேதி திரையிடப்பட்ட இந்தப் படத்தை குறித்து ஹலிதா செய்தியாளர்களிடம் கூறியது, 'கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதும், உதவி இயக்குனராக பணிபுரிந்த காலங்களிலும ICAF-யின் தீவிர மெம்பராக இருந்தேன். தினமும் ஃபிலிம் சேம்பர் திரையரங்கில் படம் பார்த்து வந்தேன். நுண்ணியலும் அழகியலும் கற்றுக் கொண்ட நாட்கள் அவை. ரசனையையும் பொறுப்பையும் நான் வளர்த்துக் கொள்ள ICAF மற்றும் CIFF முக்கிய காரணமாக இருந்தது. என் முதல் படம் 'பூவரசம் பீப்பீ' CIFF-யில் திரையிடப்பட்டது அளவற்ற மகிழ்ச்சி. Special Jury Mention-ஐயும் அவ்வருடம் பெற்றது. 'சில்லுக்கருப்பட்டி' டிசம்பர் 27 ரிலீசாகிறது. ரிலீஸிற்கு முன்பே இங்கு 18-ஆம் தேதி திரையிடப் போவது இப்படத்திற்கு இன்னும் சிறப்பு. தீவிரமாக சினிமாவை நேசிப்பவர்கள் காணும் அரங்கில் முதலில் இதை கொண்டு சேர்ப்பதை பெருமையாக நினைக்கிறேன்.

'சில்லுக்கருப்பட்டி'யை நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தமிழகத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது. படத்தை பார்த்து, ஜோதிகா மேடம் 'நான் தமிழில் பார்த்ததிலையே கண்ணியமான படம் இதுவாகத்தான் இருக்கும், காதலை இது போல யாராலும் சொல்ல இயலாது’ என்று கூறினார். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இது 4 கதைகளின பெட்டகம். நகர நெரிசலில் மனிதம் நெய்யும் நான்கு நவீன கதைகளை பார்க்கலாம். மேலும் இப்படம் ஒரு ‘ Conversational film’- முழுக்க முழுக்க உரையாடல்கள் நிறைந்தது. பேச்சை விட போதையான விஷயம் வேறு எதுவும் உண்டா என்று உங்களிடம் கேள்வி கேட்கும். 18-ம் தேதி திரையிடலை முன்வைத்து படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளோம். இந்தப் படத்தின் திரையிடல் முடிந்தவுடன், நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என்றார் ஹலிதா ஷமீம். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தரமான ஒரு படத்தைப் பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சில்லுக்கருப்பட்டி வெள்ளித்திரைக்கு டிசம்பர் 27-ம் தேதி வருகிறது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் அனேக ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com