தடை செய்யப்பட்ட காதல் கதையில் நடிக்கும் ஹாலிவுட் நாயகி

சர்வதேச புகழ் பெற்ற வொண்டர் வுமன் பட வரிசையில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் கால் கடோட்.
தடை செய்யப்பட்ட காதல் கதையில் நடிக்கும் ஹாலிவுட் நாயகி


இஸ்ரேலிய எழுத்தாளர் டோரிட் ராபினியன் எழுதிய ஆல் தி ரிவர்ஸ் எனும் பாலஸ்தீனிய நாவல் அந்நாட்டில் தடைசெய்யப்பட்டது. இந்த நாவலைத் திரைப்படமாக மாற்ற நடிகை கால் கடோட் முயற்சியில் இறங்கியுள்ளார். சர்வதேச புகழ் பெற்ற வொண்டர் வுமன் பட வரிசையில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் கால் கடோட்.
 
ஆல் தி ரிவர்ஸ் படத்தை கால் கடோட் மற்றும் அவரது கணவர் ஜரோன் வர்சானோ இருவரும் கேஷட் ஸ்டுடியோஸுடன் இணைந்து பைலட் வேவ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

2014 -ஆம் ஆண்டு இஸ்ரேலிய எழுத்தாளர் டோரிட் ராபினியன் எழுதிய ஹீப்ரு மொழி நாவலான பார்டர் லைஃப் அந்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நாவல் ஆல் தி ரிவர்ஸ் என்ற தலைப்புடன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.

நியூயார்க்கில் வசிக்கும் இஸ்ரேலிய பெண்ணும் பாலஸ்தீனிய ஆணும் காதலிக்கிறார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தங்கள் காதலை மறைக்கிறார்கள். இந்நிலையில் காதலுக்காக போராடும்போது உறவுகளையும் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் அவர்களின் பயணம்தான் இந்த நாவல். இது வெளியான சமயம் இஸ்ரேலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதைய கல்வி அமைச்சரான நஃப்தலி பென்னட் இதனை பள்ளிகளில் தடை செய்தார். பல எதிர்ப்புகளுக்கிடையே, இந்நாவல் புகழ்பெற்று அதிக எண்ணிக்கையில் விற்பனையானது.

பிரபல ஆங்கில எழுத்தாளரான அகாதா கிறிஸ்டியின் நாவலான டெத் ஆன் நைல் படப்பிடிப்பின் இடைவெளியில் கால் கடோட் தப்போது இஸ்ரேலுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கால் கடோட் நடிக்கவிருக்கும் புதிய படமான ஆல் ரிவர்ஸ் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கேஷட் ஸ்டுடியோஸ் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் விரைவில் படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த முழுத் தகவல்கள் அறிவிக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com