சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள ஆர்யா - நடிகை சயீஷா காதல் திருமணம்! குவியும் வாழ்த்துகள்!

ஆர்யா (38) - சயீஷா (21) ஆகியோரின் காதல் திருமணம், ஹைதராபாத்தில் மார்ச் 10 அன்று...

News image
Updated On :1 பிப்ரவரி 2019, 5:33 am

எழில்

கஜினிகாந்த் படம் நடிகர் ஆர்யாவின் திரை வாழ்வுக்குப் பெரிதளவில் உதவாமல் போனாலும் சொந்த வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்தவர், நடிகை சயீஷா. அப்போது ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி, தற்போது திருமணமாக மலரவுள்ளது. இருவரும் தற்போது காப்பான் என்கிற கே.வி. ஆனந்தின் படத்திலும் நடித்துவருகிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகர்களான சாயிரா பானு, திலீப் குமாரின் உறவினரான சயீஷா, தமிழில் வனமகன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் ஆர்யா (38) - சயீஷா (21) ஆகியோரின் காதல் திருமணம், ஹைதராபாத்தில் மார்ச் 10 அன்று இஸ்லாமிய முறைப்படி நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இருவரும் இத்தகவலை உறுதி செய்யவில்லை. எனினும் சமூகவலைத்தளங்களில் ஆர்யா, சயீஷா ஆகிய இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.