சுயம் பாதிக்கப்படும்போது சோறு மூன்றாம் பட்சமே: வருத்தத்தைப் பதிவு செய்யும் பார்த்திபன்!

நாமும் ஸ்பெஷல் என்பது மறந்து நம் சுயம் பாதிக்கப்படும் போது சங்கம், சமூகம் என்பதெல்லாம் மூன்றாம் பட்சமே...
சுயம் பாதிக்கப்படும்போது சோறு மூன்றாம் பட்சமே: வருத்தத்தைப் பதிவு செய்யும் பார்த்திபன்!
Published on
Updated on
1 min read

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன். இளையராஜா 75 நிகழ்ச்சி இன்று நாளையும் சென்னையில் நடைபெறும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இந்நிலையில் ராஜிநாமா செய்ததற்கான காரணத்தை ட்விட்டரில் சூசகமாகக் கூறியுள்ளார் பார்த்திபன். ட்விட்டரில் அவர் எழுதியுள்ள பதிவுகள்:

hemingWAY சொல்வதாக One WAY ஆகவே இருக்கும் அன்பும் நட்பும். நாமும் Special என்பது மறந்து நம் சுயம் பாதிக்கப்படும் போது சங்கம் சமூகம் என்பதெல்லாம் மூன்றாம் பட்சமே!

சுயம் பாதிக்கப்படும் போது சோறு மூன்றாம் பட்சமே என்று எழுதியுள்ளார். 

எனினும் இளையராஜா 75 நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்போது சென்னையில் தான் இருக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு தினங்களுக்கு... இளையராஜா இசை கேட்டபடி திசைத் தெரியாப் பயணம் காரில் என்று எழுதியுள்ளார். இளையராஜா நிகழ்ச்சி முடிந்தபிறகு ராஜிநாமா செய்ததற்கான காரணங்களை அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com