அடுத்த வாரம் திருமணம்: செளந்தர்யா ரஜினி அறிவிப்பு!

வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த நடிகர் விசாகனை செளந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்யவுள்ளார்.... 
அடுத்த வாரம் திருமணம்: செளந்தர்யா ரஜினி அறிவிப்பு!
Updated on
1 min read

வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த நடிகர் விசாகனை செளந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்யவுள்ளார். இதை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார் செளந்தர்யா.

2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால், இருவரும் 2016-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் செளந்தர்யா மறுமணம் செய்யவுள்ளார். 

கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்துள்ள விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு அடுத்த வாரம் பிப்ரவரி 11 அன்று திருமணம் நடைபெறவுள்ளது. விசாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com