பாடகர் எஸ்.பி.பி-யின் தாய் காலமானார்!
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தாய் சகுந்தலம்மா நெல்லூரில் நேற்று காலமானார். அவருக்கு வயது, 89.


பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தாய் சகுந்தலம்மா நெல்லூரில் நேற்று காலமானார். அவருக்கு வயது, 89.
எஸ்.பி. சம்பமூர்த்தியைத் திருமணம் செய்த சகுந்தலம்மாவுக்கு 8 குழந்தைகள். 3 மகன்கள், 5 பெண்கள். அவர்களில் எஸ்.பி.பியும் எஸ்.பி. சைஜலாவும் திரைத்துறையில் பாடகர்களாகப் புகழ்பெற்றுள்ளார்கள். எஸ்.பி.பியின் தந்தை 1987-ல் காலமானார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவுடன் இருந்த சகுந்தலா நேற்று காலமாகியுள்ளார். வெளிநாட்டுக் கச்சேரியில் இருந்த எஸ்.பி.பி. நெல்லூருக்கு விரைந்துள்ளார். சகுந்தலம்மாவுக்கு இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...