இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. E4என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்திற்காக, தனது B ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலமாக 'முதல் காப்பி' அடிப்படையில் பிரபல இயக்குநர் பாலா இயக்கியுள்ளார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தில் அறிமுகமாகிறார். வங்காள மொழியில் ஒரு படத்தில் நடித்துள்ள மேகா செளத்ரி, தற்போது தமிழ் திரையுலகுக்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதியுள்ளார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும் இசையமைத்துள்ளார்.