ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட இசைப்பிரபலங்கள் வியந்து பாராட்டும் 12 வயது தமிழ்ச் சிறுவன்! (விடியோ)

ரஹ்மானின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த லிடியன் ட்விட்டரில் கூறியதாவது: நன்றி அங்கிள்...
ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட இசைப்பிரபலங்கள் வியந்து பாராட்டும் 12 வயது தமிழ்ச் சிறுவன்! (விடியோ)
Published on
Updated on
1 min read

12 வயது தமிழ்ச் சிறுவனை இசையுலகமே அண்ணார்ந்து பார்க்கிறது. இந்த வயதில் இத்தனை திறமையா என்று வியக்காதவர்களே இல்லை.

சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பியானோ திறமையை வெளிப்படுத்தி உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.

நிகழ்ச்சியில், Nikolai Rimsky-Korsakov-ன் The Flight of the Bumblebee என்கிற இசைக்குறிப்பை பியானோவில் லிடியன் அதிவேகமாக வாசிக்கும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி எல்லோரிடத்திலும் பன்மடங்கு ஆச்சர்யங்களை உருவாக்கியுள்ளது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜேம்ஸ் கார்டன் இதன் விடியோவைப் பகிர்ந்து என் வாழ்க்கையில் நேரலையாகப் பார்த்த மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று எனக் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் லிடியன் வாசித்த விதத்தைப் பார்த்த நிகழ்ச்சியின் நடுவர்கள் ட்ரூ பேரிமோர், ஃபெயித் ஹில், ருபால் மற்றும் லிடியனின் தந்தை சதீஷ் வர்தன் ஆகியோரின் ஆச்சர்யமான முகபாவங்கள் அந்த விடியோவுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளன. முதலில் அசல் இசையை வாசித்த லிடியன் பிறகு நிமிடத்துக்கு 208 பீட்கள், அடுத்ததாக நிமிடத்துக்கு 325 பீட்கள் என்கிற வேகத்தில் வாசித்து அசத்தியுள்ளார்.

2 வயது முதல் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய லிடியன், தற்போது மொசார்ட், பீதோவன் ஆகியோரின் இசைக்குறிப்புகளை பியானோவில்  நன்கு வாசிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரால் தற்போது 14 இசைக்கருவிகளை வாசிக்கமுடியும். பல  நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்தச் சிறுவயதில் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் தற்போது பரவி வரும் விடியோவை ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்து லிடியனைப் பாராட்டியுள்ளார். இதையடுத்து அனிருத், ஜேம்ஸ் வசந்த் போன்ற தமிழ்த் திரையுலகப் பிரபலங்களும் லிடியனுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள். 

ரஹ்மானின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த லிடியன் ட்விட்டரில் கூறியதாவது: நன்றி அங்கிள். எனக்கு எப்போதும் உங்கள் இசை பிடிக்கும். நேரில் உங்களிடம் வாழ்த்து பெறவும் என்னுடைய ஸ்டீன்வே பியானோவில் வாசிக்கவும் ஆவலாக உள்ளேன். என்னுடைய பியானோ உங்களுக்காகக் காத்திருக்கிறது அங்கிள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com