அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. இந்தப் படம் நாளை வெளியாகிறது.
இந்நிலையில் சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு இயக்குநர் சிவா அளித்த பேட்டியில் கூறியதாவது:
எல்லாத் தரப்புப் பார்வையாளர்களுக்கும் ஏற்றவாறு படம் பண்ணுவது சவாலானது. ஒவ்வொரு ரசிகரும் விதவிதமான வாழ்க்கையிலிருந்தும் ரசனைகளிலிருந்தும் வருவார்கள். ஆனால் ஒரே படம் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கவேண்டும். இதுதான் பொழுதுபோக்கு அம்சமுள்ள படத்தின் கடினமான விஷயமாகும்.
அஜித்தைக் கொண்டு ஒரு வரலாற்றுப் படம் இயக்க விரும்புகிறேன். அது வருங்காலத்தில் நடக்கலாம் என்று கூறியுள்ளார்.