இது வேற வேற லெவல்! வைரலாகி வரும் ட்ரெய்லர்!

The Next Level trailer is a fun ride and it's a delight to watch the ensemble cast coping up with problems during a chaotic adventure
இது வேற வேற லெவல்! வைரலாகி வரும் ட்ரெய்லர்!
Published on
Updated on
2 min read

ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவலின் ட்ரெய்லர் : 2017-ஆம் ஆண்டு வெளியான ஜுமான்ஜி: வெல்கம் டு தி ஜங்கிள் மற்றும் ஜுமான்ஜி வரிசையின் நான்காவது படமான ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரெய்லர் திங்கள்கிழமை வெளியானது.

ஜுமன்ஜி: தி நெக்ஸ்ட் லெவலில் முந்தைய படத்தில் பணிபுரிந்த அதே குழுவினர் திரும்பி வந்துள்ளனர், ஆனால் இம்முறை களமிறங்கியவர்களின் அதகளம் முற்றிலும் வித்யாசமானது என்றார்கள் படக்குழுவினர். ஏறக்குறைய 3 நிமிடம் ஓடக் கூடிய படத்தின் ட்ரெய்லர் இதை உறுதி செய்துள்ளது. ஜாலியாக ஆரம்பித்த ஒரு பயணம் எப்படி குழப்பமான சாகஸமாக மாறியது, ஆபத்துக்களை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக ட்ரெய்லர் இருப்பதைப் பார்த்து ஜுமான்ஜி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.

ஸ்பென்சர் (அலெக்ஸ் வுல்ஃப்) தன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஜுமான்ஜி கேமில் சில திருப்பங்களைச் செய்து, ஜுமான்ஜி இருக்கும் இடத்திற்குத் திரும்ப முயற்சிக்கிறான் என்பதுடன் இந்த ட்ரெய்லர் பரபரப்பாகத் தொடங்குகிறது, ஆனால் அந்த முயற்சி சொதப்பிவிடவே சிக்கிக் கொள்கிறான். அதைத் தொடர்ந்து, அவனது நண்பர்கள் குழு அவனைக் காப்பாற்ற ஜுமான்ஜி உலகிற்கு தேடி வருகிறார்கள். ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் இல்லை என்பதை உணர்கிறார்கள். அந்த உலகின் மிக ஆபத்தான விளையாட்டிலிருந்து தப்பிக்க, வறண்ட பாலைவனங்கள் முதல் பனி மலைகள் வரை, அவர்கள் போராடித் தப்ப வேண்டியிருக்கிறது.

ட்வேன் ஜான்சன், கெவின் ஹார்ட், ஜாக் பிளாக், கரேன் கில்லன், நிக் ஜோனாஸ், செர் டேரியஸ் பிளெய்ன், மேடிசன் ஐஸ்மேன், மோர்கன் டர்னர், மற்றும் அலெக்ஸ் வுல்ஃப் ஆகியோர் முந்தைய படத்திலிருந்து தங்கள் பாத்திரங்களை தொடர்கின்றனர். அதே சமயம், அக்வாஃபினா, டேனி குளோவர் மற்றும் டேனி
டிவிட்டோ ஆகியோர் புதியவர்களாக இதில் இணைந்துள்ளனர்.

1995-ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஜுமான்ஜியின் அடுத்த பாகம்தான் ஜுமன்ஜி: வெல்கம் டு தி ஜங்கிள் (2017). இதில் ராபின் வில்லியம்ஸ் நடித்தார். வெல்கம் டு தி ஜங்கிள் பாக்ஸ் ஆபிஸில் அந்த ஆண்டு ஆதிக்கம் செலுத்தியது. 962 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியுடன், ஜேக் காஸ்டன் இயக்கிய ஜுமன்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் டிசம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது

அதன் ட்ரெய்லர் இதோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com