‘சாஹோ’ படத்தின் காதல் சைக்கோ பாடல் டீஸர் வெளியீடு!

இன்று பிரபாஸ் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் சாஹோவில் இடம்பெறும் ‘சைக்கோ சய்யான்’ இங்க பாரு காதல் சைக்கோ எனத் தொடங்கும் பாடலின் டீஸரை தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
‘சாஹோ’ படத்தின் காதல் சைக்கோ பாடல் டீஸர் வெளியீடு!

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகவிருக்கும் சாஹோ படத்தின் டீஸர்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15 என அறிவிக்கப்பட்டதில் இருந்து படத்திற்கான எதிர்பார்ப்பும், விளம்பரங்களும் அதிகரித்திருக்கின்றன. இன்று பிரபாஸ் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் சாஹோவில் இடம்பெறும் ‘சைக்கோ சய்யான்’ இங்க பாரு காதல் சைக்கோ எனத் தொடங்கும் பாடலின் டீஸரை தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாகுபலி 1& 2 திரைப்படங்களுக்குப் பிறகு பிரபாஸுக்கு இந்தியா தவிர உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அதனை முன்னிட்டு சாஹோ திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என நான்கு மொழித்திரைப்படமாக வெளிவரவிருக்கிறது. இத்திரைப்படத்தின் இயக்குனர் சுஜீத், ராதாகிருஷ்ணா ஃபிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிப்பவர்கள் வம்சி & பிரமோத். இப்படத்திற்கான பாடலை மதன் கார்க்கி எழுதி இருக்கிறார்.

இசையமைத்திருப்பது தனிஷ்க் பக்‌ஷி. பாடலைப் பாடி இருப்பவர் த்வானி பானுஷாலி.

இத்திரைப்படத்தில் பிரபாஸுடன் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், முரளி ஷர்மா, அருண் விஜய், லால், மந்திரா பேடி, உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com