காதலர்கள் ஒருவருக்கொருவர் அறைந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?: அர்ஜூன் ரெட்டி இயக்குநர் கேள்வி!

ஒரு பெண்ணுடன் ஆழமான உறவில் இருக்கும்போதும் ஒருவருக்கொருவர் அறைந்துகொள்ளக்கூடிய சுதந்தரம் இல்லாவிட்டால்...
காதலர்கள் ஒருவருக்கொருவர் அறைந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?: அர்ஜூன் ரெட்டி இயக்குநர் கேள்வி!
Published on
Updated on
1 min read

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.

அர்ஜூன் ரெட்டி படம் கபீர் சிங் எனத் தற்போது ஹிந்தியிலும் ரீமேக் ஆகியுள்ளது. பிரபல நடிகர் சாஹித் கபூர் கதாநாயகனாகவும் கியாரா அத்வானி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். தெலுங்கில் இப்படத்தை இயக்கிய சந்தீப் வங்கா, ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான கபீர் சிங், வசூலில் எதிர்பாராத அளவுக்குச் சாதனை படைத்து வருகிறது. எனினும் படத்தில் பெண்களைத் தரக்குறைவாகச் சித்தரித்துள்ளதாக விமரிசனங்கள் எழுந்துள்ளன. இதற்கு இயக்குநர் சந்தீப் வங்கா, ஃபிலிம் கம்பேனியன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

நீங்கள் ஆழமான காதலில் இருக்கும்போதும் ஒரு பெண்ணுடன் ஆழமான உறவில் இருக்கும்போதும் ஒருவருக்கொருவர் அறைந்துகொள்ளக்கூடிய சுதந்தரம் இல்லாவிட்டால் அவர்களிடையே எதுவும் இல்லை என்பேன். கபீர் சிங் படத்தை விமரிசித்தவர்கள் திரையுலகுக்கு ஆபத்தானவர்கள். அவர்கள் காதலை அனுபவிக்காமல் இருந்திருக்கலாம். அவர்களிடம் பெண்ணியப் பார்வை மட்டுமே உள்ளது. அவர்கள் வேறு எதைப் பற்றியும் பேசவில்லை. என்னை அவர்களுக்குப் பிடிக்காததால் படத்தின் இதர விஷயங்கள் குறித்துப் பேசவில்லை. 

படத்தில் கதாநாயகி, காரணமின்றி கதாநாயகனை அறைகிறாள். ஆனால் கதாநாயகன் அவளை அறைவதற்குக் காரணமாவது இருந்தது. உங்களால் அறைய முடியாமல், உங்களுக்கான பெண்ணைத் தொடுவதற்கு உரிமை இல்லாமல், முத்தம் கொடுக்க முடியாமல் இருந்தால் அங்கு எவ்வித உணர்ச்சியும் இல்லை என்பேன் என்று விமரிசனங்களுக்குப் பதில் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com