காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் ரஜினி, ஷங்கர்!

காப்பான் படப் பாடல், வரும் ஜூலை 21 அன்று வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது... 
காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் ரஜினி, ஷங்கர்!
Updated on
1 min read

சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - காப்பான். 

சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். ஆகஸ்ட் 30 அன்று வெளிவரவுள்ளது.

இந்நிலையில் காப்பான் படப் பாடல், வரும் ஜூலை 21 அன்று வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வரும் ஞாயிறு, மாலை 6 மணிக்கு - சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறவுள்ள பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினி, ஷங்கர், வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள். இதுதவிர சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்துகொள்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com