'கொலைகாரன்' அடுத்து விஜய் ஆண்டனியின் ராஜவம்சம்!
கொலைகாரன் திரைப்படம்தான் விஜய் ஆண்டனிக்கு கை கொடுத்தது என்று சொல்லலாம். அந்தளவுக்கு அவர் நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவின. இப்போதைய இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டும் நடிப்பது என்று முடிவெடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.
இதனைத் தொடர்ந்து, ஆனந்த் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் T.D.ராஜா தயாரிக்க, ஜோகன் இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றனர் படக்குழுவினர்.
த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடிக்கிறார். படத்தின் பூஜை அண்மையில் முடிந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் விஜய் ஆண்டனிக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.