

சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்புடன் இயங்கி வரும் பிரபல கோலிவுட் நடிகை தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தேர்வு செய்யப்பட்ட தனித்துவ கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து தனக்கென தனி முத்திரைப் பதித்து வருகிறார் ஆண்ட்ரியா.
கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமாருடன் ஜோடி சேர்ந்த முதல் படமான பச்சைக்கிளி முத்துச்சரத்தில் 10 வயது சிறுவனுக்கு தாயாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். விஸ்வரூபம், ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை, அவள், தரமணி, வடசென்னை என்று மாறுபட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்திலும் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் ஆண்ட்ரியா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆராவாரத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தனது பெற்றோர்களுடன் இருக்கும் குழந்தைப் பருவ புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.
அம்மாடியோவ், ஆண்ட்ரியாவா இது! என்று அவரது ரசிகர்கள் பலர் 'உச்' கொட்டி வருகின்றனர். மேலும் அவரது அம்மாவைப் போன்றே இருப்பதாகவும் அடிக்கிற வெயிலுக்கு 'ஐஸ்' வைக்கின்றனர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.