மீண்டும் களமிறங்கியுள்ள சிங்கீதம் சீனிவாச ராவ்!

25 வயதுப் பெண், தொடரின் மையக் கதாபாத்திரமாக இருப்பார். காதல் மற்றும் உறவுகள் குறித்த இன்றைய இளைஞர்களின் எண்ண ஓட்டங்களை...
மீண்டும் களமிறங்கியுள்ள சிங்கீதம் சீனிவாச ராவ்!

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம், ராஜ பார்வை.

சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய இந்த மகத்தான படங்களை மறக்கமுடியுமா? 1972 முதல் படங்களை இயக்கி வருபவர், தமிழில் கடைசியாக,  கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை 2005-ல் எடுத்தார். இப்போது மீண்டும் களமிறங்கியுள்ளார். இயக்குநராக அல்ல, திரைக்கதையாசிரியராக.

பானா காத்தாடி படம் மூலமாக அறிமுகமாகிய இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், கடைசியாக அதர்வா நடித்த செம போதை ஆகாதே படத்தை இயக்கினார்.  அவர் இயக்கும் வெப் சீரியல் ஒன்றுக்கு திரைக்கதை அமைத்துள்ளார் 88 வயது சிங்கீதம் சீனிவாச ராவ்.

25 வயதுப் பெண், தொடரின் மையக் கதாபாத்திரமாக இருப்பார். காதல் மற்றும் உறவுகள் குறித்த இன்றைய இளைஞர்களின் எண்ண ஓட்டங்களைக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்கவுள்ளோம். காதல், திருமணம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களை 88 வயது சிங்கீதம் சீனிவாச ராவ் திரைக்கதையாக அமைத்துள்ளார் என்பதை உங்களால் நம்பமுடியாது என்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

செப்டம்பர் அல்லது அக்டோபரில் Sony Liv செயலியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com