கோவையில் இளையராஜா நேரடியாகப் பங்கேற்கும் முதல் இசை நிகழ்ச்சி இதுதான்!

சென்னையில் கோலாகலமாக நடந்து வெற்றி பெற்ற நிகழ்ச்சியான இசை கொண்டாடும் இசை அடுத்து கோவையில் 'ராஜாதி ராஜா' என்ற பெயரில் இளையராஜாவின் இசைத் திருவிழாவாக நடைபெற உள்ளது.
கோவையில் இளையராஜா நேரடியாகப் பங்கேற்கும் முதல் இசை நிகழ்ச்சி இதுதான்!

சென்னையில் கோலாகலமாக நடந்து வெற்றி பெற்ற நிகழ்ச்சியான இசை கொண்டாடும் இசை அடுத்து கோவையில் 'ராஜாதி ராஜா' என்ற பெயரில் இளையராஜாவின் இசைத் திருவிழாவாக நடைபெற உள்ளது. ஜூன் 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. அருண் மீடியாஸ், மஹம் எண்டர்பிரைசஸ், சியா அமைப்பு ஆகியவற்றின் சார்பில் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, கோவை, கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணியளவில் தொடங்கும்.

இந்நிகழ்ச்சிக்கு தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் மீடியா பார்ட்னர்களாக உள்ளன. இளையராஜா நேரடியாகப் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி கோவையில் நடைபெறுவது இதுவே முதல் முறை. இதில் பிரபல பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, பாடகி உஷா உதூப் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பாட உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஹங்கேரி நாட்டின் இசைக் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

கோவையின் முக்கியப் பிரமுகர்கள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இசை ரசிகர்கள் மற்றும் கேரளம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இசை ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த மாபெரும் இசை விருந்தில் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்காக கோவை கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்களுக்குப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com