நடிக்க கேட்டு இனிமே தயவு செஞ்சு யாரும் வராதீங்க! இயக்குநர் மிஷ்கின் பேட்டி (விடியோ)

நான் ரைட்டர் - டைரக்டரா தான் என் கேரியரை தொடங்கினேன். ஐடியா இல்லை நடிக்க.
நடிக்க கேட்டு இனிமே தயவு செஞ்சு யாரும் வராதீங்க! இயக்குநர் மிஷ்கின் பேட்டி (விடியோ)

நந்தலாலா படத்திலிருந்து சுட்டு பிடிக்க ஆசை வரை உங்க நடிப்புப் பயணம் பத்தி சொல்லுங்க!

நான் ரைட்டர் - டைரக்டரா தான் என் கேரியரை தொடங்கினேன். ஐடியா இல்லை நடிக்க. நந்தலாலா ஒரு ஸ்வீட் fate. நிறைய பேர் மறுத்துட்டாங்க. அஞ்சாதே முடிச்சிட்டு வந்து கூட கேட்டேன். ஆனால் யாரும் பண்ணலை. அஞ்சாதே இத்தனைக்கும் பெரிய ஹிட். தமிழ் சூழல்ல அப்படி ஆச்சு. ஹீரோ அம்சமுள்ள படங்கள் மட்டும்தான்... அதனால நான் பண்ற மாதிரி ஆச்சு. ஒரு intense கதாபாத்திரம், ஒரு Japanese படத்தோட inspiration - நிஜ வாழ்கை சம்பவம் ஒண்ணு இதுதான் நந்தலாலா. வியாபரரீதியா சரியா போகலை. It was a shock to the audience. Movie, experiencing people-க்கு reach ஆகலை. ஆனா இப்ப நந்தலாலா பிடிச்ச படம்னு நிறைய பேர் என்கிட்ட சொல்றாங்க...டிவில வேற அடிக்கடி போடறாங்க...ஒரு ஆக்டரா அந்தப் படத்துல எனக்கு.. மனநிலை பாதிக்கப்பட்ட அண்ணன் இருந்தாரு அவரை உத்துப் பாத்ததால என்னால அந்த ரோலை பண்ண முடிஞ்சுது. நான் ஒரு trained actor இல்லை. சின்ன வயசுல நாடகம்ல நடிச்சிருக்கேன். fear இல்லை, பெரிய நடிகனாகனும்னு ஆசை இல்லை. என்னை ஒரு வரையறைக்குள்ள கட்டுப்படுத்திப்பேன். சீனுக்கு தேவையான நேரம் ஷார்டா சிம்பிளா நடிச்சிடுவேன். தவிர பாடி லாங்குவேஜ்ல கொஞ்சம் convey பண்ணிடுவேன். சாஞ்ச நடை....ரெண்டு பெரிய ஷூ...chaplin மாதிரி மாத்தி போட்டிருப்பேன். இதுவே என்னை define பண்ணிடுச்சு. தலை மொட்டை. மேக்கப் கிடையாது, வெளிப்புற தோற்றம் எனக்கு நடிக்கக் கூடிய ஸ்கோப் தந்துச்சு. அப்பறம் ராஜாவோட வேலை செஞ்சது மனதுக்கு மகிழ்ச்சி. கலை இயக்குநர் ஓவியர் மருதுவோட 80 நாட்கள் மறக்க முடியாத அனுபவம். மனசு சுத்தமா இருந்துச்சு ரொம்ப நல்லவனா இருந்தேன் அந்த டைம்ல. இதெல்லாம் சேர்ந்து அந்த படத்தை அழகாச்சிடுச்சு. ரொம்ப பிடிச்சு செஞ்சேன். ஆன்மாவை பரிசோதிக்கும் தருணம், எவ்வளவு தூரம் தள்ளிப் பார்க்கலாம், என் வாழ்க்கையில அவ்வளவு தூரம் உண்மையா இருந்த தருணம் வேறு இல்லை.

நிறைய படங்கள் வேணாம்னு சொல்லிட்டேன். ஒரு தடவை எனக்கு பிடித்த நண்பர் ஒளிப்பதிவாளர் செழியன் ஒரு கதை சொன்னார். ஹீரோ வைச்சு ஒரு கதை சொன்னார். இல்லை செழியன் இதை பண்ணாதீங்கன்னு சொன்னேன். அவருக்கு என்மேல கோபம் கூட இருந்திருக்கலாம். ஆனால் ரெண்டு மூணு மாசம் கழிச்சு படம் ஆரம்பிச்சார். அது டுலெட். I am formally trained writer. 12 படங்கள் எழுதிட்டேன். systematic writer. நிறைய படிக்கறேன். கதை கேட்கும் போதே எனக்கு தெரிஞ்சுடும். இது சரியில்லை, structure-ல ஏதோ ப்ராப்ளம். எல்லாரும் கதை சொல்லும் போது சின்சியரா தான் சொல்வாங்க. ஆனா தொலைநோக்குப் பார்வை கஷ்டம், ஆனால் என்னால ஈஸியா அதைப் பாக்க முடியும். மத்தவங்களுக்கு. அதை கண்டுபிடிக்கறதுல நிறைய ப்ராப்ளம் இருக்கு. கதைல இதெல்லாம் பிரச்னை, இதுல வொர்க் பண்ணுங்கன்னு சொல்வேன். சிலருக்கு அது கோபம் கூட வரும். வாரத்துக்கு மூணு ஃபோன் வருது. உங்களை நினைச்சுத் தான் எழுதியிருக்கேன் நீங்கதான் வேணும்னு. நாளைக்கு நான் செத்துப் போயிட்டேன்னா படம் பண்ண மாட்டியான்னு கேட்பேன். எனக்கு சோம்பேறியா இருக்க பிடிக்கும். நடிகரா இருந்தா டிசிப்ளினா இருக்கணும். I dont push myself to be an actor. தியாகராஜன் குமாரராஜா என்னை சரியா வேலை வாங்கிட்டான். ரெண்டு வருஷம். இன்னும் கூட tired ஆ இருக்கு. எழுத எனக்கு டைம் தேவை, அடுத்து டைரக்டிங். இதுக்கு நடுவுல தான் ஆக்டிங். இந்தப் பேட்டி மூலமா அசிஸ்டெண்ட் டைரக்டர் யாராவது கூப்பிடாம இருந்தா நல்லது!  தயவு செஞ்சு வராதீங்க....சூப்பர் டீலக்ஸ்கு அப்றம் நிறைய படம் வந்தது. standing behind camera is fulfilling. ரொம்ப தடியா இருக்கேன்  - பாக்கலாம்...

முழு நேர்காணலைக் காண


நன்றி - கோபிநாத் ராஜேந்திரன், சினிமா எக்ஸ்ப்ரஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com