வைல்ட் கார்ட் மூலம் வரவிருக்கும் அந்த இரண்டு பிரபலங்கள் யார்? பிக் பாஸ் சீஸன் 3!

விஜய் டிவியில் பாப்புலர் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸன் தொடங்கியது.
வைல்ட் கார்ட் மூலம் வரவிருக்கும் அந்த இரண்டு பிரபலங்கள் யார்? பிக் பாஸ் சீஸன் 3!
Published on
Updated on
3 min read

விஜய் டிவியில் பாப்புலர் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸன் தொடங்கியது. அதன் பின் ஆண்டு தோறும் 100 நாட்கள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் வெற்றிகரமாக தங்கினால் பரிசு அவர்களுக்கே. அடுத்து 2018-ம் ஆண்டு ஜூன் 17 தேதி 2-ஆவது சீஸன், வழக்கம் போலவே நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து பிக் பாஸ் மூன்றாவது சீஸன் நேற்று, ஜூன் மாதம் 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

பலத்த எதிர்ப்பார்ப்புடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் துவக்கத்தில் கமல்ஹாசன் நெகிழ்ச்சியாகப் பேசினார். தனது அப்பா வீட்டை பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு அறையாக அறிமுகப்படுத்தினார். அதன் பின் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து சுற்றுப் பார்த்தார். வீட்டைப் பாராட்டி கன்பெஷன் அறைக்குச் சென்றார். நாய்க்குட்டி போல அங்கு சுற்றிக் கொண்டிருந்த ஒரு காமெராவுக்கு சக்ரவர்த்தி என்று செல்லப் பெயரிட்டு அழைத்துச் சென்றார். அதன் பின் ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகம் செய்து அவர்களுக்கு தன் சார்பில் ‘வின்னர்’ பதக்கத்தை அளித்து வீட்டினுள் அனுப்பி வைத்தார் கமல் ஹாசன். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள்

1. சின்னத்திரை செய்தி வாசிப்பாளர், வெள்ளித் திரையில் குணசித்திர நடிகை பாத்திமா பாபு முதல் போட்டியாளாராக வந்தார். 

2. லாஸ்லியா (இலங்கை தொலைக்காட்சி சானலொன்றின் செய்தி வாசிப்பாளர்) செய்தி வாசித்தபடியே 2-ஆவது போட்டியாளராக அறிமுகமானார்

3. நடிகை சாக்‌ஷி அகர்வால் 3-வது போட்டியாளராக அறிமுகமாகியுள்ளார். இவர் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர்.

4. ஜாங்கிரி மதுமிதா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மதுமிதா நான்காம் போட்டியாளராக பங்கேற்றார்.

5. நடிகர் கவின் 5-ஆவது போட்டியாளராக அறிமுகமானார். இவர் சரவணன் மீனாட்சி மட்டுமல்லாது விஜய் டிவியின் சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர்.புகழ் 

6. நடிகை அபிராமி வெங்கடாச்சலம் 6-ஆவது போட்டியாளராக அறிமுகமானார். அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் அபிராமி நடித்துள்ளார். இத்திரைபப்டம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

7. நடிகர் சரவணன் 7-ஆவது போட்டியாளராக வந்தார். சிறப்பு விருந்தினராக அவருடன் வந்த கஞ்சா கருப்பு பிக் பாஸ் 3 வீட்டுக்கு சரவணனை அழைத்துச் சென்றார். 

8. வனிதா விஜயகுமார் எட்டாவது போட்டியாளராக அறிமுகமானார். 

9. இயக்குநர் சேரன் 9-ஆவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்கு சென்றார்.

10. கன்னட நடிகை ஷெரின் 10-ஆவது போட்டியாளராக அறிமுகமானார். இவர் தனுஷுடன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

11. மோகன் வைத்யா 11-ஆவது போட்டியாளராக அறிமுகமானார்.

12. மாடல் தர்ஷன் தியாகராஜா 12-வது போட்டியாளராக ஹரிஷ் கல்யாண் அறிமுகம் செய்து வைத்தார்.

13. சாண்டி 13-ஆவது போட்டியாளராக அறிமுகமானார்.

14. பாடகர் முகென் ராவ் 14-ஆவது போட்டியாளராக அறிமுகமானார். இவர் மலேசியாவைச் சேர்ந்தவர்.

15. நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. 15-ஆவது போட்டியாளராக அறிமுகமானார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்துள்ளார். நடிக்க வருவதற்கு முன் ஏர் ஹோஸ்டஸாக இருந்தார் ரேஷ்மா.

பிக் பாஸ் 3 வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ள இந்த 15 போட்டியாளர்களைத் தவிர வைல்ட் கார்ட் மூலம் மேலும் இரண்டு பேர் போட்டியாளர்களாக அறிமுகமாகவிருக்கின்றனர். விரைவில் அத்தகவல்கள் வெளிவரும்.

பல பிரச்னைகளுக்கு இடையே, அதிலும் தமிழகத்தில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில் பிக் பாஸ் நாட்டுக்கும் வீட்டுக்கும் ரொம்ப தேவை என்று புலம்புகிறார்கள் சில நெட்டிசன்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com