

பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் அக்ஷய் குமாரும் முதல்முறையாக இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூர்யவன்சி ( Sooryavanshi) என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபல இயக்குநர் கரன் ஜோஹர் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். அக்ஷய் குமார் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கும் இந்தப் படம் ஜூலை 31 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பா என்கிற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரோஹித் ஷெட்டி இயக்கும் படம் இது. மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.