ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு அறிவிப்பு: தமிழக அரசு நடவடிக்கை 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட 'அட்  ஹாக்' குழுவை நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Published On :

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட 'அட்  ஹாக்' குழுவை நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து சங்கத்தை நிர்வகிக்க சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.

இந்த நியமத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தார்.

அதேசமயம் மே 1-ஆம் தேதியன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  சிறப்பு அதிகாரி சேகர் தெரிவித் தார்.

தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகிகளால் புதனன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட பொதுக்குழு கூட்டமானது நடைபெற வாய்ப்பில்லை என்பது தொடர்பான  அறிவிப்பு, அவரது அறிவுறுத்தலின் பேரில்  தயாரிப்பாளர் சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட 'அட்  ஹாக்' குழுவை நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசு சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அட் ஹாக் கமிட்டி பொறுப்பாளர்கள் விபரம் பின்வருமாறு:

இயக்குநர் பாரதிராஜா

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்

நடிகர் SVசேகர்

தயாரிப்பாளர் JSK.சதிஷ்குமார்.

நடிகர் K.ராஜன்

தயாரிப்பாளர் T.சிவா

தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன்.

தயாரிப்பாளர் துரைராஜ்

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்.

Story image

இனி இவர்களின் கீழ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இயங்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.