முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

டி.ஆர்.பி-யில் நெ.1: அஜித்தின் விஸ்வாசம் படம் சாதனை!

கடந்த வாரம் இந்திய அளவிலான டிஆர்பி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது விஸ்வாசம் பட ஒளிபரப்பு...

News image
Updated On :9 மே 2019, 12:14 pm

எழில்

அஜித் - இயக்குநர் சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்த படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்தார்கள். இசை - இமான், ஒளிப்பதிவு - வெற்றி. இந்தப் படம்  ஜனவரி 10-ம் தேதி வெளியானது. தமிழ்நாட்டில் ரூ. 130 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறினார். 

விஸ்வாசம் படம் கடந்த மே 1-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பானது. இது தற்போது ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கடந்த வாரம் இந்திய அளவிலான டிஆர்பி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது விஸ்வாசம் பட ஒளிபரப்பு. இத்தகவலை சத்யஜோதி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.