

'தட்சமயம் ஒரு பெண்குட்டி' மலையாளப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் நித்யா மேனன். அவரைச் சந்திக்க சில தயாரிப்பாளர்கள் ஒன்றாக வந்தனர். முன் அனுமதி பெறாமல் சந்திக்க வந்தவர்களை சந்திக்க மறுத்து விட்டார் நித்யா. கோபம் அடைந்த அவர்கள் நித்யாவுக்கு நடிக்கத் தடை (ரெட் கார்ட்) போடுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இது பற்றி நித்யாவிடம் கேட்டபோது, 'எனது தாய்க்கு கேன்சர் பாதிப்பு 3-ம் நிலையை எட்டி உள்ள தகவல் அறிந்து படப்பிடிப்பில் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு நடித்து விட்டு ஓய்வு நேரத்தில் கேரவேனில் அமர்ந்து தாயை நினைத்து நான் அழுது கொண்டிருக்கிறேன். க்ரானிக் மைக்ரேன் எனப்படும் தலைவலி பிரச்னையும் எனக்கு இருக்கிறது. அந்த நேரத்தில் சந்திக்க வேண்டும் என்றபோது என்னால் முடியவில்லை. எனக்குத் தடை போடுவார்கள் என்று வதந்தி வருகிறது. அதுபற்றி கவலைப்பட மாட்டேன். என்னை ஈகோ நிறைந்தவள் என்று நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டும். நான் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.