

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் டெனட் (Tenet) படத்தில் பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா நடிக்கிறார்.
ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, மைக்கேல் கைன், டிம்பிள் கபாடியா போன்றோர் நடிக்கும் இந்தப் படம் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்படவுள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் படத்தில் 61 வயது டிம்பிள் கபாடியா நடிப்பதற்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்கள்.
டெனட் படம், அடுத்த வருடம் ஜூலை 17 அன்று வெளிவரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.