‘திருமணம்’ படத்தை பைரசியில் பார்த்தவர்கள் பிராயச்சித்தம் செய்ய ஒரு வாய்ப்பு!

தொடர்பு வசதிகள் அவ்வளவு இல்லாத காலக்கட்டங்களிலேயே சுமார் 1 லட்சம் பேருக்கு மேல் ஒரு நபருக்கு 100 ரூபாய் என அனுப்பினார்கள்..
‘திருமணம்’ படத்தை பைரசியில் பார்த்தவர்கள் பிராயச்சித்தம் செய்ய ஒரு வாய்ப்பு!
Published on
Updated on
1 min read

பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் சேரன். சொந்த பிரச்னைகள் மற்றும் கடைசியாக இயக்கிய ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் ஏற்பட்ட வியாபார நஷ்டம் ஆகியவற்றால் சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில், திருமணம் என்கிற படத்தை அவர் இயக்கியுள்ளார். 

உமாபதி, கவிதா சுரேஷ், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்த திருமணம் படத்தை இயக்கி அதில் நடித்திருந்தார் சேரன். மார்ச் மாத துவக்கத்தில் திருமணம் படம் வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் சேரன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

நண்பர்களே. குற்ற உணர்விலிருந்து விடுபட ஒரு வாய்ப்பு. திருமணம் படம் தியேட்டர்ல பாக்க முடியல, அதனால பைரசில பார்த்தேன்னு சொல்றவங்க, அதற்கான தொகையை இந்த அக்கவுண்டுக்கு அனுப்பவும். பேங்க் சென்றெல்லாம் அலையவேண்டியதில்லை. போன் மூலமாக அனுப்ப வசதியுள்ளது. நல்ல திரைப்படம் என்று பாராட்டுபவர்களும் எங்கள் குடும்பத்தோடு சேரன் சார் படம் பார்ப்போம் என வாய் நிறைய சொல்லும் அன்பானவர்களும் தியேட்டரில் பார்க்க வாய்ப்பில்லை என்ன செய்ய என வருந்துபவர்களுக்கும் இது தீர்வு. ஆட்டோகிராஃப் வெளியானபோது இப்படி ஒரு அறிவிப்பை விளம்பரமாகக் கொடுத்தேன். தொடர்பு வசதிகள் அவ்வளவு இல்லாத காலக்கட்டங்களிலேயே சுமார் 1 லட்சம் பேருக்கு மேல் ஒரு நபருக்கு 100 ரூபாய் என அனுப்பினார்கள். இப்போது நம் மக்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கலாம் என்று கூறி வங்கிக் கணக்கு எண்ணையும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com