இந்த வாரம் வெளியாகவுள்ள இரு தமிழ்ப் படங்கள்!

கோடை விடுமுறை முடிகிற சமயத்தில் இந்த வாரம் மே 31 அன்று இரு தமிழ்ப் படங்கள் மட்டும் வெளிவருகின்றன... 
இந்த வாரம் வெளியாகவுள்ள இரு தமிழ்ப் படங்கள்!
Published on
Updated on
1 min read

கோடை விடுமுறை முடிகிற சமயத்தில் இந்த வாரம் மே 31 அன்று இரு தமிழ்ப் படங்கள் மட்டும் வெளிவருகின்றன. ஆனால் அந்த இரு படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள படங்கள். 

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது. 

பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா, ஆர்ஜே பாலாஜி, நந்திதா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள படம் தேவி 2. இசை - சாம் சிஎஸ். 

இந்த இரு படங்களும் முதல் மூன்று நாள்களில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com