ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட் போன்ற ஆல்பங்களை மீண்டும் முயற்சிக்காதது ஏன்: இளையராஜா பதில்

நானாக ஓர் உத்வேகத்தோடு செய்ததுதான் ஹவ் டூ நேம் இட், நத்திங் பட் விண்ட் ஆல்பங்கள்...
ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட் போன்ற ஆல்பங்களை மீண்டும் முயற்சிக்காதது ஏன்: இளையராஜா பதில்

இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2-ம் தேதி சென்னை, ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில்  இசை கொண்டாடும் இசை என்ற இளையராஜாவின் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தப் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கச்சேரியில், கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்திருந்த இளையராஜாவும், பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இணைந்து  ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. மட்டுமல்லாது, கே.ஜே. ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உள்ளிட்ட பல முன்னணி பாடகர்கள்  பங்கேற்று பாடவுள்ளனர். 

இந்த நிகழ்ச்சி தொடர்பாக, சினிமா எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துக்கு இளையராஜா பேட்டியளித்துள்ளார். சில பாடல்களை பாடல்களை இன்னும் வேறு விதத்தில், வித்தியாசமாகச் செய்திருக்கலாமோ என்று உங்களுக்குத் தோன்றியதுண்டா என்கிற கேள்வி இளையராஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

எந்தப் பாடலையும் புதிய வடிவத்தில் என்னால் தரமுடியும். நானாக ஓர் உத்வேகத்தோடு செய்ததுதான் ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட் ஆல்பங்கள். அதுபோல ஆல்பங்கள் எத்தனை செய்திருக்க முடியும்? ஆனால் பைரசியும் ஆடியோ மார்க்கெட்டும் வேறொரு மாதிரியாக மாறிவிட்டதால் அதுபோன்ற ஆல்பங்களைச் செய்வதை நான் நிறுத்திவிட்டேன். இதனால் புதிதான இசையைப் படைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைந்துவிட்டன. அதேசமயம், வித்தியாசமாக முயற்சி செய்திருக்கலாம் என்கிற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதுண்டு என்று கூறியுள்ளார்.

முழுமையான பேட்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com