
நடிகர் சூரி, அம்மன் என்கிற உணவகத்தை மதுரையில் 2017-ல் தொடங்கினார். அந்த உணவகத்துக்கு மக்கள் அளித்த வரவேற்பினால் உற்சாகமாகி தற்போது அதே மதுரையில் இரு கிளைகளைத் தொடங்கியுள்ளார்.
மதுரை அவனியாபுரம் ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் அம்மன் - சைவ உணவகம், அய்யன் - அசைவ உணவகம் என இரு கிளைகளைத் தொடங்கியுள்ளார். இந்த இரு கிளைகளையும் சூரியின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான சிவகார்த்திகேயன் அண்மையில் திறந்து வைத்தார்.
இந்த உணவகத்தின் சுவை மக்களின் மனதைக் கவர்ந்துவிடவே, சூரியின் வியாபாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், இந்த உணவகத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் நடிகர் விஜய் சேதுபதி.
உணவகத்துக்கு சாப்பிட வந்த ரசிகர்கள் விஜய் சேதுபதியை சூழந்து செல்ஃபி எடுக்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் ஃபோனை வாங்கி அவர்களுஅன் செல்ஃபி எடுத்துத் தந்தார் விஜய் சேதுபதி.
ஒரு ரசிகர் தன் உறவினருடன் விடியோ காலில் பேசுங்கள் என்று ஆசையாகக் கேட்கவே, அவரின் ஆசையையும் நிறைவேற்றினார். சூரிக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இரவு உணவையும் அங்கேயே சாப்பிட்டார் விஜய் சேதுபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.