காதலரைப் பிரிந்து வாடும் நடிகைக்கு வந்த சோதனை!

நடிகை இலியானா வெளிநாட்டு நண்பா் ஆண்ட்ரு நிபோன் உடன் காதல் கொண்டிருந்தார்.
காதலரைப் பிரிந்து வாடும் நடிகைக்கு வந்த சோதனை!
Published on
Updated on
2 min read

நடிகை இலியானா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரு நீபோன் என்பவரைக் காதலித்தார். இருவரும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்தனர்.

உண்மையில், அவர்கள் தங்கள் உறவை சிறிது காலம் மறைத்து வைத்திருந்தார்கள். சமூக ஊடகங்களில் இலியானா தனது காதலருடன் எடுத்த அழகிய படங்களை பதிவிடத் தொடங்கிய பின்னர்தான் அவர்களின் காதல் கதையை உலகம் அறிந்தது.

பின்னர், ஒரு படத்தில், ஆண்ட்ரூவை 'கணவன்' என்று விளித்திருந்தார்.  இது அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக ஊகங்களை உருவாக்கியது. சில பட வாய்ப்புகளையும் இதனால் இழந்தார் இந்த இஞ்சி இடுப்பழகி.

இந்த ஜோடிகள் இரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர், ஆனால் அவர்களது திருமணத்தைப் பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை.  ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஆண்ட்ருவுடனான காதலை முறித்துக் கொண்டார். இருவரும் பிரிந்தனர். காதல் முறிந்து சில மாதங்கள் ஆகியும் பெரிதாக பட வாய்ப்புகள் இலியானாவுக்கு வரவில்லை. காதல் பிரிவில் வாடிக் கொண்டிருந்தவருக்கு மன ஆறுதலைத் தந்தது பெயிண்டிங் மட்டும்தான்.

இந்நிலையில்  தனிமையில் அவா் இருக்கும் நேரங்களில் காதலன் நினைவு அவரை வாட்டுகிறது என்று அவ்வப்போது தனது நெருங்கிய வட்டாரங்களில் தெரிவித்து வந்தார்.

சமீபத்தில் வீட்டின் ஜன்னல் அருகே நின்றிருந்தவருக்கு எங்கேயோ ஒலித்த காதல் பாடல் ஒன்று காதில் விழ அதைக் கேட்டு மெய்மறந்து நின்றார்.

தனது நிலையை புகைப்படமாக இணையத்தில் வெளியிட்ட இலியானா கூடவே ஒரு குறுந்தகவலைப் பகிர்ந்தார். ‘காதல் பாடல்களைக் கேட்கும் போது, ஒரு இசை விடியோவில் நடிப்பதைப் போன்று கற்பனை செய்தவாறு என் ஜன்னலுக்கு வெளியே ஆவலுடன் பார்க்கிறேன்’ என்று தனது நிலையை குறிப்பாக உணா்த்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com