தளபதி 64 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் பிரபல சானல் நட்சத்திரம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ‘கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் அறிமுகமானவர்
ramya subramaniam
ramya subramaniam
Published on
Updated on
2 min read

ரம்யா சுப்ரமணியனுக்கு அறிமுகம் தேவை இல்லை. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ‘கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் அறிமுகமானவர், தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை மட்டுமல்லாமல் பவர் லிஃப்டிங் சாம்பியன் என பன்முகத் திறமை உடையவர் இவர்.

ரம்யாவின் குரலிலும், ஹைபர் எனர்ஜியிலும் தொகுத்து வழங்கப்படும் திரைப்பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகள் தனித்துவமானவை. பிரபல நிறுவனங்கள் நடத்தும் விருது வழங்கும் விழாக்களையும் கலகலப்பாக்குபவர்.  Spontanious speaker என்ற பதத்துக்கு சரியான உதாரணம் ரம்யா என்று சொல்லலாம்.

மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரம்யா தற்போது இயக்குனர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64' படத்தில் இணைகிறார். இந்தப் படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறாராம். 

பிரபல நாளிதழ் எடுத்த பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரம்யா 'என் வாழ்க்கையின் மிக சிறந்த உண்மையான தருணம் இதுதான், இப்படி ஒரு விஷயம் நடப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், தளபதி விஜய்யிக்கும் மிக்க நன்றி’ என்று பதிவிட்டுள்ளார் ரம்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com