அச்சு அசலாக கபில்தேவை ஒத்திருக்கும் ரன்வீர் சிங்!

நடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்
ranvir singh
ranvir singh
Updated on
2 min read


'83' என்ற ஹிந்தி திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்துள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களுக்கு  மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களுக்கும் விருந்தளிக்கும் வகையில், அச்சு அசலாக கபில் தேவை ஒத்திருக்கும் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை அண்மையில் வெளியிட்டு மகிழ்ந்தனர். இந்த ஆட்டம் டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச் சிறந்த புகைப்படம்.  


இந்தியா – ஜிம்பாப்வே போட்டி, என்றுமே மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. மேலும், அந்த போட்டியானது  எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படவும் இல்லை, பதிவு செய்யவும் பட்டிருக்கவில்லை.

ரன்வீர் சிங்கின் வியத்தகு ஒப்பனை, அச்சு அசல் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் அமைந்திருந்தது, அது நிஜ கபில்தேவுக்கும், திரையில் வரும் கபில்தேவுக்கும் உள்ள வித்தியாசங்கள் அதிகமின்றி அமைந்திருந்தது.  

1983 ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவு அணியை வென்று முதன்முதலாக உலக கோப்பையை வென்று சாதனைப் படைத்த தருணங்களை அற்புதமாகப் படமாக்கம் செய்துள்ளனர்.

ரன்வீர் சிங்க் கபில் தேவாகவும், தாஜீர் பாசின் சுனில் கவாஸ்கராக, ஹார்டி சாந்து மதன்லாலாக, சகீப் சலீம் மொஹிந்தர் அமர்நாத்தாக, அம்மி வீர்க் பல்வீந்தர் சிங் சாந்துவாக, ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக, சிராக் படீல் சந்தீப் பாடீலாக, சாஹில் கட்டார் சையது கிர்மானியாக, ஆதிநாத் கோத்தரே திலீப் வெங்சர்காராக, தைர்யா கார்வா ரவி சாஸ்திரியாக, டின்கர் சர்மா கீர்த்தி ஆஸாத்தாக , ஜதின் சர்மா யஷ்பால் ஷர்மாவாக, நிஷாந்த் தஹியா ரோஜர் பின்னியாக, ஆர் பத்ரி சுனில் வால்சன்னாக, போமன் இரானி பாரூக் என்ஜினியராக, பங்கஜ் திரிபாதி பி ஆர் மான் சிங்காக, தீபிகா படுகோனே ரோமி கபில்தேவாக ஒரு பிரமாதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

விளையாட்டை மையப்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் இதுவே மிகப் பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும். 83 பிலிம்ஸ் லிட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் வெளியிடுகிறது. கபீர் கான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனே, சாஜித் நதியாத்வாலா, கபீர் கான், நிகில் திவேதி, விஷ்ணு இந்தூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகின்ற 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகெங்கும் திரைக்கு வரவிருக்கிறது '83’.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com