

கன்னட நடிகையான ராஷ்மிகா மன்டானா கீத கோவிந்தம், சாலோ, டியர் காம்ரேட் போன்ற தெலுங்குப் படங்களிலும் நடித்துப் பிரபலமானவர்.
டோலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் ‘கீத கோவிந்தம்’ படத்தின் மூலம் கவர்ந்தார்.
விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த டியர் காம்ரேட் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ரசிகர்களால் அதிகம் பாராட்டைப் பெற்றது.
அவரது அசத்தலான நடிப்பும் முகபாவமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அண்மையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அழகான பதிவை எழுதியுள்ளார்.
அதில் விஜய் நடித்த பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடலை பகிர்ந்து, 'என்னவென்று தெரியவில்லை.. இந்தப் பாடல் வரிகளைக் கேட்கையில் சிலிர்க்கிறது.. அந்த குரல், அந்த இசை, அதில் வரும் நடிகர்கள்…' என்று பதிவிட்டுள்ளார்.
ராஷ்மிகா விஜய்யின் தீவிர ரசிகை என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரியும். அண்மையில் தான் அடிக்கடி கேட்கும் பாடல் இது என்று சிலாகித்து எழுதியுள்ளார்.
தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ராஷ்மிகா, கார்த்தி நடிக்கும் 'சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமாகிறார்.
ரொமான்ஸ் genre-ல் உருவாகவிருக்கும் இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் 'ரெமோ’படத்தை இயக்கியவர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் 2020 சம்மர் ஸ்பெஷலாகத் திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.