சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிவுகளை கடுமையாக விமரிசித்த நடிகை ஸ்ரீப்ரியா!

சூப்பர் சிங்கர் சீஸன் 7 இறுதிச் சுற்று அண்மையில் கோவை கொடிசியா வளாகத்தில் நடந்தது.
மூக்குத்தி முருகன்
மூக்குத்தி முருகன்
Updated on
1 min read

சூப்பர் சிங்கர் சீஸன் 7 இறுதிச் சுற்று அண்மையில் கோவை கொடிசியா வளாகத்தில் நடந்தது. மூக்குத்தி முருகன், சாம் நிஷாந்த், புன்யா, விக்ரம், கௌதம் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வான போட்டியாளர்கள் ஆவார்கள்.

வழமைப் போலவே போட்டியாளர் ஒவ்வொருவரும் இறுதிச் சுற்றில் இரண்டு பாடல்களைப் பாடினார்கள்.  இவர்களுள் மூக்குத்தி முருகன் டைட்டிலை வென்று ஐம்பது லட்சம் பெறும் அடுக்ககம் ஒன்றினை பரிசாகப் பெற்றார். அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்துள்ளது. இவரைத் தொடர்ந்து இரண்டாவது பரிசு விக்ரமுக்கு கிடைத்தது. இருபத்தி ஐந்து லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டன. 3-வது பரிசை சாம் நிஷாந்த் மற்றும் புன்யா ஆகிய இருவரும் பெற்றனர். 


 
இந்த முடிவுகளில் அதிருப்தி அடைந்த நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார்., 'விஜய் டிவி இசைரீதியாக திறமையானவருக்கு சூப்பர் சிங்கர் டைட்டிலை ஒரு போதும்  வழங்கியதில்லை என்று நினைக்கிறேன். அந்த 5 போட்டியாளர்களில் புன்யாவும் விக்ரமும்தான் இசையைப் பொருத்தவரை மிகவும் திறமைசாலிகள். சத்யபிரகாஷுக்கு வெற்றி கிடைக்காமல் போனதிலிருந்தே போங்காட்டம் தொடங்கி விட்டது. எப்போதாவது நியாயமா, சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்க்கிறேன்’ என்று தனது மனதில் தோன்றியதை வெளிப்படையாக பதிவிட்டுள்ளார் ஸ்ரீப்ரியா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com