காதல், மோதல் காமெடி என ரசிகர்களை கவரும் ஜப்பான் திரைப்பட விழா!

சென்னைக்கு சினிமாவுக்குமான தொடர்பு ஆன்மாவிற்கும் உடலுக்குமான தொடர்பை போன்றது.
theatre
theatre
Published on
Updated on
2 min read


சென்னைக்கு சினிமாவுக்குமான தொடர்பு ஆன்மாவிற்கும் உடலுக்குமான தொடர்பை போன்றது. என்ன மொழி, என்ன நாடு என்பது என்பதெல்லாம் நம்ம மக்களுக்கு ஒரு பிரச்னையே இல்லை, சினிமா என்றால் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அப்படியொரு கொண்டாட்டமும் குதூகலமுமாக சென்று கொண்டிருக்கிறது  ஜப்பான் திரைப்படவிழா.

கடந்த 8 ஆம் தேதி தொடங்கி வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவை புதுடில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜப்பான் பவுண்டேஷன் நடத்துகிறது. அண்ணா நகர் வி ஆர் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐகான் திரையரங்கில் நடைபெற்று வரும் விழாவில் தினந்தோறும் ஆயிரம் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஐந்து காட்சிகளும், திங்கள் முதல் வெள்ளிவரை  5 மணி 7;30 மணி என இரண்டு காட்சிகளுடன் நடைபெறும் இவ்விழாவில் 25 ஜப்பானிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இவ்விழாவிற்கு அனுமதி முற்றிலும் இலவசம் என்பதால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.

ஜப்பான் என்றால் இயக்குனர் அகிரோ குரோசாவாவை யாராலும் மறக்க முடியாது. தனித்துவமான ஷாட் அமைப்பு, கதை விவரணை மூலம் உலக இயக்குனர்களின் பிக்பாஸாக திகந்தவர் அகிரோ குரோசாவா. அவர் பெற்றுத் தந்த பெருமையை இன்றும் தக்க வைத்து கொண்டிருக்கிறது ஜப்பான் திரையுலகம்.

ஜப்பானின் கதைகள் என்றும் தனித்துவம் வாய்ந்தவை. அது காதலாகட்டும், ஆக்‌ஷன் வகையாட்டும். காமெடியாகட்டும் காட்சி அமைப்பில் அதகளம் செய்துவிடுவார்கள் படைப்பாளிகள்.  துவக்க நாளில் திரையிடப்பட்ட கிங்டம் என்ற வரலாற்று படம் ஒரு ஆக்‌ஷன் திருவிழா . தொடர்ந்து The Crimes that Bind, 12 Sucidal Teens, Bento Harrassment, My Dad is a heel Wristeler போன்ற உலக மக்களின் அபிமானம் பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

மாலை வேளைகளில் ஒரு காதல் அல்லது ஆக்‌ஷன் படம் 5 மணிக்கும் காமெடி கலந்த படம் 7:30 மணிக்கு திரையிடப்படுகிறது. இதனால் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் சிரித்து சிரித்து கவலை மறந்து மகிழ்ச்சியான மனதுடன் வீடு திரும்புகின்றனர். இது ஜப்பான் திரைப்பட விழாவின் மீது மிகுந்த அபிமானத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 12-ம் தேதி மாலை திரையிடப்பட்ட A Banana at this time of the night மற்றும் 13-ம் தேதி மாலை திரையிடப்பட்ட One Cut of the Dead ஆகிய படங்கள் செம்ம காமெடி ரகளை. முதல் கதை ஒரு மாற்றுத் திறனாளிக்கும் அவனுக்கு சேவையாற்ற வந்த இளம் சேவகர்களுக்குமான உறவை விவரிக்கிறது. அடுத்த படம் ஜோம்பிகள் பற்றி படம் எடுக்க முயலும் ஒரு இயக்குனரின் காமெடி அனுபவம்.

இவ்விழாவில்  ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் திவ்யா ஜெயராமன் கூறுகையில், ‘வரும் 17 ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது. வெளி சனி ஞாயிறுகளில் சிறப்பு காட்சிகள் மற்றும் உலக திரைப்படவிழாக்களில் பாராட்டுக்கள் பெற்ற shotlifters திரைப்படமும் திரையிடப்படுகிறது . வரும் பார்வையாளர்களுக்கு டீ ஷர்ட், டோடி பேக் , பேனா, நோட் புக் என்று சிறப்பு பரிசுகளும் தினந்தோறும் வழங்குகிறோம்’ என்றார்.

அடுத்த மாதம் சென்னை உலகத் திரைப்பட விழா தொடங்கவுள்ள நிலையில் சினிமா ரசிகர்களுக்கு இப்பொழுதே அட்வான்ஸ் விருந்து தொடங்கிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com