
'நஸ்ரியாவா இப்படி?' என்று கேட்கும் அளவுக்கு ஆளே மாறிப் போயிருக்கிறார். அப்படி என்ன செய்து விட்டார் என கேட்பவர்களுக்கு, ரஜினி ஸ்டைலில் புகை பிடித்து ஊதி தள்ளுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்.
நஸ்ரியா தன்னுடைய கணவர் பஹத் பாசில் உடன் இணைந்து 'டிரான்ஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். அன்வர் ரஷீத் இயக்கி உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. அதைப் பார்த்தவர்கள்தான் நஸ்ரியாவா இப்படி என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.
ரஜினி ஸ்டைலில் சகட்டு மேனிக்கு சிகரெட் புகைத்தபடி அவர் நடந்து வருவது போல் அந்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அஜித்தின் 'வலிமை' படத்தில் நடிப்பது என்று தகவல்கள் வந்துக் கொண்டிருக்கிற நேரத்தில் இது மாதிரி புகைப்படங்களை வெளியிட்டது சரியா? என்று அவரது ரசிகர்கள் கேள்வி கேட்டு துளைத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.