
சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.
ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.
தர்பார் படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். ஜனவரி 9 அன்று தர்பார் வெளியாகவுள்ளது. இதனால் இந்தப் படம் பொங்கல் விடுமுறை தினங்களால் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவொன்றை எழுதியுள்ளார். தனது வாழ்நாளில் மிகச் சிறந்த டப்பிங் செஷன் இதுதான், தலைவர் தர்பார் டப்பிங் முடிந்தது என்று ரஜினியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
One of the best Dubbing sessions in my life Thalaivar Darbar dubbing completedDarbarThiruvizha LycaProductions pic.twitter.com/zcati
mdash ARMurugadoss ARMurugadossNovember 18, 2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.