மனைவி ஷாலினியின் பிறந்த நாளுக்கு அட்டகாசமான சர்ப்ரைஸ் பரிசளித்த அஜித்!

அஜித் ஷாலினி இருவரும் கோடம்பாக்கத்தின் ஸ்வீட் தம்பதியர். ரசிகர்கள் தங்கள் தல அஜித்தின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் அஜித்தின் குடும்ப விசேஷங்கள் அனைத்தையும் கொண்டாடி மகிழ்வார்கள்.
anoshka shalini and ajith
anoshka shalini and ajith
Published on
Updated on
1 min read

அஜித் ஷாலினி இருவரும் கோடம்பாக்கத்தின் ஸ்வீட் தம்பதியர். ரசிகர்கள் தங்கள் தல அஜித்தின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் அஜித்தின் குடும்ப விசேஷங்கள் அனைத்தையும் கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்நிலையில் அண்மையில் ஷாலினி நவம்பர் 20-ம் தேதி தனது 40-ம் பிறந்த நாளைக் கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை குவித்தனர். அஜித் ஒவ்வொரு ஆண்டும் வித்யாசமான பரிசுகளை சர்ப்ரைஸ்களை பிறந்த தின ஸ்பெஷலாக ஷாலினிக்கு தருவார். இந்த ஆண்டு ஷாலினி எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை அவர் செய்ததுதான் ஹைலைட்.

பிறந்த நாளுக்கு ஒருசில நாட்கள் முன்பே அஜித் ஷாலினியின் பெற்றோரிடம் ஷாலினி பள்ளி நாட்களில் யாருடன் நட்பாக இருந்தார் என்பதைத் தெரிந்து கொண்டார். ஷாலினி படித்த கோடம்பாக்கம் ஃபாத்திமா பள்ளியில் அவரது நெருங்கிய தோழிகளாக இருந்தவர்களை கண்டுபிடித்து, ஷாலினி பிறந்த நாள் பார்ட்டிக்கு அழைத்தார். பட்டினம்பாக்கத்தின் அருகே இருக்கும் ஹோட்டல் லீலா பேலஸில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார் அஜித். 

வழக்கம் போல அனோஷ்கா, ஆத்விக்குடன் ஷாலினியை டின்னருக்கு அழைத்து வருவது போல் அஜித் அழைத்து வர, அதற்கு முன்னரே முன்னேற்பாடாக தோழியர் காத்திருக்க, ஒவ்வொருவரும் ஷாலினியை ஏதேச்சையாக சந்தித்தது போல் கைகுலுக்க, எதிர்பாராத இந்த சந்திப்புக்களால் ஷாலினி திக்குமுக்காடிவிட்டார். எங்க இருக்க எப்படி இருக்கே என்று தன்னுடைய ப்ரெண்ட்ஸ்களை கட்டி பிடித்து நெகிழ்ச்சி அடைந்தார். ஷாலினியின் மகிழ்ச்சியைப் பார்த்து புன்னகைத்தபடி ரசித்தார் அஜித். ஒவ்வொருத்தராக சர்ப்ரைஸாக ஆஜர் ஆக, ஒரு கட்டத்தில் ஷாலினி இது திடீர் சந்திப்பு அல்ல, ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு என்பதைக் கண்டுபிடித்துவிட்டார். அதுவும் இந்த அழகான வேலையைச் செய்தவர் தன் அன்பான கணவர்தான் என்பதும் அவருக்கு தெரிந்துவிட்டது. அதற்கு பின் கொண்டாட்டம் களை கட்ட, ஷாலினியின் போட்டோக்கள் நிறைந்த அந்த அரங்கில் சுற்றமும் நட்பும் புடைசூழ கொண்டாடி மகிழ்ந்தனர் அஜித் தம்பதியர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com