படப்பிடிப்பில் இளம் நடிகைக்கு மாரடைப்பு.. எனர்ஜி ட்ரிங், மருந்துகளை மட்டுமே நம்பி சரியாக உண்ணாததால் விபரீதம்!

இவர் தமிழில் ‘பேய்கள் ஜாக்கிரதை’ என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஆரம்ப காலங்களில் சஹாரா மற்றும் எம் டிவியில் தொகுப்பாளராகவும் பணி புரிந்திருக்கிறார். இவரை பெருவாரியான மக்கள்
gehana vasisth hospitalised
gehana vasisth hospitalised
Published on
Updated on
1 min read

மும்பையைச் சேர்ந்த இளம் நடிகை கெஹானா வசிஸ்ட் (Gehana Vasisth). தமிழில் வந்தனா திவாரி என்ற பெயரில் அறிமுகமானார். இவருக்கு தற்போது 31 வயதாகிறது. மாடலிங் செய்து கொண்டே இந்தி, தெலுங்குத் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களிலும் நடித்த்து வருகிறார். இதுவரை 70 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.  இந்நிலையில் மாலத் தீவுப் பகுதியில் வெப் சீரிஸ் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றிருந்த நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் வைத்து கெஹானா மாரடைப்பில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த போதும் அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை எனத் தகவல். ஏனெனில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதே கெஹானாவுக்கு நாடித்துடிப்பு இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள் அங்கிருந்த மருத்துவர்கள். பின்னர் மருத்துவமனையில் எலெட்ரிக் ஷாக் சிகிச்சை அளித்ததில் அவரது நாடித்துடிப்பை மீட்க முடிந்ததே தவிர சுயநினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. அவரது நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது எனத் தெரிவித்திருக்கிறது மருத்துவமனை தரப்பு. தொடர்ந்து இடைவிடாமல் ஷூட்டிங் இருந்த காரணத்தால் நடிகை கெஹானா சரியாக உண்ணாமல் கடந்த இரண்டு நாட்களாக எனர்ஜி ட்ரிங், மருந்துகள் உதவியால் மட்டுமே பசியாற முயன்றதால் வந்த வினை இது என்கிறார்கள் உடனிருந்தவர்களும், மருத்துவர்களும்.

இவர் தமிழில் ‘பேய்கள் ஜாக்கிரதை’ என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

ஆரம்ப காலங்களில் சஹாரா மற்றும் எம் டிவியில் தொகுப்பாளராகவும் பணி புரிந்திருக்கிறார். இவரை பெருவாரியான மக்கள் அறிந்து கொள்ள நேர்ந்தது மிஸ் ஆசியா பிகினி 2012 போட்டியின் பின்னரே!

அதுமட்டுமல்ல 2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் வர்ணனையை அதுல் வாஸன் மற்றும் யோக்ராஜ் சிங்குடன் இணைந்து நிகழ்த்திய அனுபவமும் இவருக்கு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com