இயக்குனர் பார்த்திபனின் காலில் விழுந்த ரசிகர்!

ஒத்த செருப்பு படம் பார்த்த நெகிழ்ச்சியில் இயக்குனர் பார்த்திபனின் காலில் விழுந்த ரசிகர்! 
parthiban
parthiban
Published on
Updated on
1 min read


இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழா கொண்டாட்டங்கள் கோவா தலைநகர் பனாஜியில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய திரைப்பட விழா 65 நாடுகளின் பங்கேற்புடன் 200 உலக படங்கள் மற்றும் 12000 பார்வையாளர்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் சார்பில் சினிமா சந்தை எனும் மாபெரும் நிகழ்வு இத்திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சமீபத்திய படமான ஒத்த செருப்பு திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படத்தை இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த ரசிகர்கள் வெகுவாக வந்திருந்தனர். இப்படத்தை பார்த்துவிட்டு நெகிழ்ச்சியுடன் வெளியே வந்த கேரள ரசிகர் ஒருவர் மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் “I like your film very much …எனது வணக்கம் என்று கூறி திடீரென்று இயக்குனர் பார்த்திபனின் காலில் விழுந்தார். இதை எதிர்பார்க்காத பார்த்திபன் அந்த ரசிகரின் அன்பில் நெகிழ்ந்து அவரை கட்டி அணைத்து கொண்டார். இந்த உணர்வுப்பூர்வமான காட்சி சில நிமிடங்கள் ரசிகர்களை மேலும் உணர்ச்சிபூர்வமான நிலைக்கு கொண்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com