ஹிந்தி நடிகை என்பதால் ஹிந்திதான் பேச வேண்டுமாம்.. மொழி ஆதிக்கவாதிக்கு டாப்ஸி தந்த 'நச்' பதில்! (விடியோ)

ஹிந்தி நடிகை என்பதால் ஹிந்தி மொழியில் பேச வேண்டும் என்ற மொழி ஆதிக்கவாதிக்கு நடிகை டாப்ஸி "நான் தென்னிந்திய நடிகையும் கூட, தமிழ் தெலுங்கில் பேசவா?" என பதிலடி தந்துள்ளார்.
ஹிந்தி நடிகை என்பதால் ஹிந்திதான் பேச வேண்டுமாம்.. மொழி ஆதிக்கவாதிக்கு டாப்ஸி தந்த 'நச்' பதில்! (விடியோ)


ஹிந்தி நடிகை என்பதால் ஹிந்தி மொழியில் பேச வேண்டும் என்ற மொழி ஆதிக்கவாதிக்கு நடிகை டாப்ஸி "நான் தென்னிந்திய நடிகையும் கூட, தமிழ் தெலுங்கில் பேசவா?" என பதிலடி தந்துள்ளார்.

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடிகை டாப்ஸி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

அதில், நடிகை டாப்ஸி பார்வையாளர்கள் மத்தியில் தனது திரை அனுபவங்களை நெறியாளரிடம் ஆங்கில மொழியில் பகிர்ந்து வந்தார். இதன் நடுவே டாப்ஸியை மறித்த பார்வையாளர் ஒருவர் ஹிந்தியில் பேசும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த நடிகை டாப்ஸி, பார்வையாளர்களை நோக்கி இங்குள்ள அனைவருக்கும் ஹிந்தி மொழி புரியுமா என கேள்வி எழுப்பினார். இதற்குப் பெரும்பாலானோர் புரியாது என பதிலளித்தனர். 

இருந்தபோதிலும் அந்த நபர் டாப்ஸியை விடாது நீங்கள் ஹிந்தி நடிகைதானே பிறகு ஏன் ஆங்கில மொழியில் பேச வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தினார். 

இதற்கும் பதிலடி தந்த நடிகை டாப்ஸி, "சார் நான் தென்னிந்திய நடிகையும்தான். அதனால் தமிழ், தெலுங்கில் பேசவா?" என பதில் கேள்வி எழுப்பினார். 

இதன்பிறகு, தான் பேசும் கருத்து நிறைய மக்களை சென்றடைய வேண்டும் என விரும்புவதாக என டாப்ஸி விளக்கமளித்தார். இதற்கும், அப்படி என்றால் ஹிந்தி மொழி மக்கள்தான் நிறைய பேர் என அவர் பிடிவாதம் பிடித்தார்.

இதையடுத்து, டாப்ஸி இந்த விவாதத்தை நிறுத்திவிட்டு மீண்டும் தனது கலந்துரையாடலை ஆங்கில மொழியிலேயே தொடர்ந்தார்.

இந்நிலையில், டாப்ஸி பதிலடி தந்த இந்த விடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரலாகத் தொடங்கியது. அனைவரும் டாப்ஸியை பாராட்டி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com