அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! வெற்றிமாறனைப் பாராட்டிய மு.க.ஸ்டாலின்!

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் நான்காவது படமாக அண்மையில் வெளிவந்திருக்கும் படம் அசுரன்.
manju warrier and dhanush in asuran
manju warrier and dhanush in asuran

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் நான்காவது படமாக அண்மையில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பூமணியின் ‘வெக்கை’ நாவலை மிகச் சிறந்த அரசியல் திரைப்படமாக மாற்றியிருக்கிறார் வெற்றிமாறன். படத்தில் தனுஷ், மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஜி.வி. பிரகாஷ். 

பஞ்சமி நில மீட்பு, அதில் இடதுசாரி இயக்கங்களின் பங்களிப்பு, ஆதிக்கச் சாதியினரின் அவமதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செருப்பணியும் போராட்டம், கீழ்வெண்மணி சம்பவம் என்று பல முக்கியமான அரசியல் அடையாளங்களை இந்தத் திரைப்படம் தொட்டுச் செல்கிறது. ஆனால் இவை அனைத்துமே படத்தின் ஓட்டத்துடன் கலந்து சிறந்த காட்சியமைப்புகளால் இயல்பாக காண்பிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு தடவை மட்டுமல்லாமல் ரசிகர்கள் இரண்டு அல்லது மூன்று தடவை இந்தப் படத்தைப் பார்த்ததாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அசுரன் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தனியரங்குக் காட்சியொன்றில் பார்த்துள்ளார். இந்தப் படம் குறித்த கருத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஸ்டாலின். 'அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து, சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதைகளம் வசனம் என வென்று காட்டியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் நடிகர் தனுஷுக்கும் பாராட்டுகள்' என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com