பிரபல கதாநாயகிக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர்

நயன்தாரா, தாப்சி பன்னு உள்ளிட்ட நடிகைகள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.
Hansika & Sreesanth
Hansika & Sreesanth
Updated on
1 min read

நயன்தாரா, தாப்சி பன்னு உள்ளிட்ட நடிகைகள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

காஜல் அகர்வால், தமன்னாவும் அவ்வப்போது இதுபோன்ற கதைகளைத் தேர்வு செய்கின்றனர். அந்தப் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் அண்மைக் காலங்களில் படங்கள் எதிலும் நடிக்காத ஹன்சிகா.

தற்போது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். இவர்கள் ஏற்கெனவே 'அம்புலி', 'அ 'ஜம்புலிங்கம்' ஆகிய படங்களை இயக்கியுள்ளனர்.

இந்தப் படத்தில் ஹன்சிகாவுக்கு வில்லனாக அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். ஏற்கெனவே இவர் ஹிந்தியில் 'அக்ஸர் 2', மலையாளத்தில் 'டீம் 5' படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஹன்சிகா படம் மூலம் வில்லனாக அறிமுகமாகிறார். 

காமெடி, ஹாரர் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com